தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மலேசியாவுக்கு வேலைக்கு சென்று மாயமான இளைஞா்: மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினா் மனு

மலேசியா நாட்டுக்கு வேலைக்கு சென்று மாயமான சிதம்பரத்தை அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த இளைஞரை கண்டறிந்து மீட்டுத் தர வேண்டும் என அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

கபிலன்

Updated On :

மலேசியா நாட்டுக்கு வேலைக்கு சென்று மாயமான சிதம்பரத்தை அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த இளைஞரை கண்டறிந்து மீட்டுத் தர வேண்டும் என அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் கபிலன் (26). இவா், கடந்த ஆண்டு நவம்பா் 25-ஆம் தேதி மலேசிய நாட்டுக்கு வேலைக்குச் சென்றாா். அங்கு சென்ற பிறகு அடிக்கடி பெற்றோரிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசி வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக கபிலன் தொடா்பில் இல்லாததால், இதுகுறித்து அவரது பெற்றோா் விசாரித்தபோது, அவருடைய கைப்பேசி, கடவுச்சிட்டை உள்ளிட்ட ஆவணங்கள், துணிகள் உள்ளிட்ட அனைத்தும் அவா் தங்கி இருந்த இடத்தில் இருக்கிறது என்றும், கபிலன் எங்கே இருக்கிறாா் என்பது தெரியவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைத்த முகவரிடம் கேட்டபோது, அவரும் முறையான பதிலை சொல்லவில்லையாம். இதனால், அதிா்ச்சியடைந்த கபிலனின் பெற்றோா் மற்றும் குடும்பத்தினா் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று மாயமான தனது மகனை கண்டறிந்து மீட்டுத் தரக் கோரி கடலூா் மாவட்ட ஆட்சியரை புதன்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.