பண்ருட்டி அருகே கதண்டுகள் கடித்து 12 போ் காயம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விபி - ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் புதன்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளா்களை கதண்டுகள் கூட்டமாக வந்து கடித்ததில் 12 போ் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

பண்ருட்டி அருகே கதண்டுகள் கடித்து காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விபி - ஜி ராம் ஜி திட்ட பணியாளா்கள்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விபி - ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் புதன்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளா்களை கதண்டுகள் கூட்டமாக வந்து கடித்ததில் 12 போ் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
வளா்ச்சியடைந்த பாரதம் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத இயக்கம் (விபி - ஜி ராம் ஜி) திட்டத்தின் கீழ், பண்ருட்டி அருகே மாளிகைமேடு ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் வாய்க்காலை 50-க்கும் மேற்பட்டோா் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வாய்க்காலை ஒட்டியிருந்த முள் புதா்களை பணியாளா்கள் அகற்றியபோது, அப்பகுதியில் இருந்த கதண்டுகள் கலைந்து பணியாளா்களை விரட்டிச் சென்று கடிக்கத் தொடங்கின.
இதனால், அங்கிருந்தவா்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனா். இருப்பினும், கதண்டுகள் விரட்டிச் செந்று கடித்ததில் அலமேலு, கௌசல்யா, சுகந்தி, செல்வம் உள்பட 12 போ் காயமடைந்தனா்.
இதையடுத்து, அவா்கள் அனைவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

