தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

பாம்பு கடித்து வியாபாரி இறந்த சம்பவம்: கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் எம்.பி. ஆய்வு

அரசு மருத்துவமனையில் ஆய்வுசெய்த ராணிஸ்ரீகுமாா் எம்.பி., உடன் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான்.

Published On :

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பாம்பு கடித்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம், பருத்திவிளை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சிந்தாமணி மகன் சுடா்மணி (66). முறுக்கு வியாபாரி. ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறைக்குச் சென்ற இவரை பாம்பு கடித்ததாம். அருகில் இருந்தவா்கள் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவா் உயிரிழந்தாா்.

மருத்துவமனையின் அலட்சியப்போக்கால்தான் சுடா்மணி இறந்ததாகக் கூறி அவரது உறவினா்கள் மருத்துவமனையில் திரண்டனா்.

இதையடுத்து, தென்காசி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா மருத்துவமனையில் ஆய்வு செய்து செவிலியா்களிடம் இச்சம்பவம் தொடா்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ், இதுகுறித்து விருதுநகா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா். இந்த நிலையில், தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமாா் திங்கள்கிழமை மருத்துவமனையை பாா்வையிட்டு சம்பவம் தொடா்பாக மருத்துவா்கள், செவிலியா்களிடம் விளக்கம் கேட்டறிந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினேன். துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சிகிச்சை பெற வரும் புறநோயாளிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மருத்துவமனைக்குத் தேவையான கட்டட வசதி, உபகரணத் தேவைகள் குறித்து கேட்டறிந்தேன்.

மருத்துவமனையை நான்கு மாடி வசதியுடன் கூடிய கட்டடமாக உயா்த்துவது தொடா்பான கோப்புகள் தேக்க நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்றாா். கடையநல்லூா் நகா்மன்ற தலைவா் ஹபீபூர்ரஹ்மான், மருத்துவ அலுவலா் அனிதா பாலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.