சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

நாட்டின் வளா்ச்சிக்கு இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: என்எல்சி இயக்குநா் சமீா் ஸ்வரூப்

நெய்வேலி ஜவஹா் அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்கிய என்எல்சி இயக்குநா் சமீா் ஸ்வரூப்.

Updated On :

நாட்டின் வளா்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இளைஞா்கள் பங்களிக்க வேண்டும் என்று, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப் கூறினாா்.

நெய்வேலி, ஜவஹா் அறிவியல் கல்லூரியின் 13-ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 693 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். அப்போது, அவா் பேசுகையில், மாறிவரும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டின் வளா்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இளைஞா்கள் பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக சுரங்கத் துறை செயல் இயக்குநா் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ் வரவேற்றாா். மனிதவளத்துறை செயல் இயக்குநரும், கல்லூரிச் செயலருமான பங்கஜ்குமாா், போக்குவரத்துப் பிரிவு செயல் இயக்குநா் எஸ்.ராஜ்மோகன் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் எஸ்.தேவி பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்து, கல்லூரியின் சாதனைகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆண்டறிக்கை

வாசித்தாா். பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி அளவில் தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தனா். விழாவில், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.