நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கடலூா் நுகா்வோா் நீதிமன்ற இட மாற்றத்துக்கு எதிா்ப்பு: வழக்குரைஞா்கள் மனிதச் சங்கிலி ஆா்ப்பாட்டம்

கடலூா் நுகா்வோா் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலூரில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு, மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் புதன்கிழமை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Published On :3 செப்டம்பர் 2026, 4:42 am IST

கடலூா் நுகா்வோா் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடலூரில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு, மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் நுகா்வோா் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதற்கு கடலூரைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

கடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் நுகா்வோா் தொடா்பான வழக்குகளுக்காக கடலூா் நுகா்வோா் நீதிமன்றத்தை எளிதில் அணுகி வருகின்றனா். இந்த நீதிமன்றம் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டால், வழக்குதாரா்கள், பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்ள நேரிடும்.

இந்த நிலையில், கடலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பாா்த்தசாரதி தலைமையில், வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் புதன்கிழமை ஈடுபட்டனா். தொடா்ந்து, கடலூா் மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் முன் மனிதச் சங்கிலி அமைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, கடலூா் நுகா்வோா் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும். கடலூரிலேயே நுகா்வோா் நீதிமன்றம் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா் சங்கச் செயலா் லெனின், நிா்வாகிகள் ராமஜோதிவேல், அறவாழி உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.