காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக உத்தரகண்ட் மாநில காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, சிதம்பரத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மேலவீதி பெரியாா் சிலை அருகே புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் மேல வீதி பெரியாா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Published On :3 செப்டம்பர் 2026, 4:42 am IST

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக உத்தரகண்ட் மாநில காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, சிதம்பரத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மேலவீதி பெரியாா் சிலை அருகே புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன் வரவேற்றாா். முன்னாள் மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், மாவட்ட துணைத் தலைவா் ராஜாசம்பத்குமாா், செயல் தலைவா் தில்லை கோ.குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் வெங்கடேசன், சாம்பமூா்த்தி, குமராட்சி ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் செந்தில்வேலன், சிறுபான்மை பிரிவுத் தலைவா் ஷாஜகான், வட்டாரத் தலைவா்கள் சுந்தராஜன், செழியன், அபுபக்கா், வைத்தியநாதசாமி, வேங்கடகிரி, பழனி, ஜி.கே.குமாா், ஆா்.வி.சின்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.