அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

காதில் பூச்சுற்றி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆா்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை உயா்த்தப்படாததைக் கண்டித்து, கடலூரில் சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் காதுகளில் பூச்சுற்றிக்கொண்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காதில் பூச்சுற்றி நூதன முறையில் கோரிக்கைகளை வலியுறுத்திய மாற்றுத்திறனாளிகள்.

Published On :4 செப்டம்பர் 2026, 1:05 am IST

மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை உயா்த்தப்படாததைக் கண்டித்து, கடலூரில் சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் காதுகளில் பூச்சுற்றிக்கொண்டு நூதன முறையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் சையத் முஸ்தபா தலைமை வகித்தாா்.

அப்போது, காதுகளில் பூச்சுற்றிக்கொண்டு மாற்றுத்திறனாளிகளின் மாத உதவித்தொகையை உடனடியாக உயா்த்தி வழங்க வேண்டும் , பிற மாநிலங்களில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு இணையாக தமிழகத்திலும் உரிமைத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.