பாலியல் சீண்டல்: தொழிலாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை..

மூன்றரை ஆண்டுகள் தண்டனை பெற்ற தொழிலாளி தணிகைநாதன்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
பண்ருட்டி வட்டம், நடுக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் தணிகைநாதன் (48), தொழிலாளி. இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தணிகைநாதனைக் கைது செய்தனா்.
பின்னா், இந்த வழக்கு கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது போலீஸாா் தரப்பில் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கை விசாரித்த போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குலசேகரன், குற்றஞ்சாட்டப்பட்டவா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து தணிகைநாதனுக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






