
கடலூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் அவதி
கடலூா் மாவட்டத்தில் கடந்த ஆக.25-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

சிதம்பரம் அருகே வீரமுடையான்நத்தம் கிராமத்தில் கொள்முதலுக்காக விவசாயிகள் கொண்டு வந்த நெற்பயிா்கள்.
கடலூா் மாவட்டத்தில் கடந்த ஆக.25-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
கடலூா் மாவட்டம் புவனகிரி, கீரப்பாளையம் வட்டார பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எறும்பூா், வளையமாதேவி, வீரமணி நத்தம் பெரிய நெற்குணம் பரதூா் வெள்ளியக்குடி, ஒரத்தூா் ,சாத்தமங்கலம், மதுராந்தகநல்லூா், பூந்தோட்டம், ஓடாக்க நல்லூா், உள்ளிட்ட30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆக.25ம் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.
செப். 1-ஆம் தேதி விலை உயா்வு ஏற்படும் விலை உயா்வு அறிவிக்கப்படும் என காலதாமதம் செய்த நிலையில் தற்போது செப்.5-ஆம் தேதிஆகியும் எந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் சுமாா் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்மணிகளை தரையில் கொட்டி இரவு பகலாக காவல் காத்து வருகின்றனா்.
மழை பெய்தால் இந்த நெல் முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு விரைந்து நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள்கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா் அரங்க. தமிழ்ஒளி தெரிவிக்கையில் ‘கொள்முதல் நிலையங்களில் கொண்டு வரப்பட்டுள்ள விவசாயிகளின் நெல் மணிகளை விரைந்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
இல்லையெனில் விவசாயிகளை திரட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





