காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

திருப்பூா் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

வடலூரில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருப்பூா் இளைஞா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறை - பிரதிப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 2:08 am IST

கடலூா் மாவட்டம், வடலூரில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருப்பூா் இளைஞா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

வடலூா் பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (45). இவா், விருத்தாசலத்தில் 17.7.2026 அன்று தனியாா் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனது ஸ்கூட்டியில் புறப்பட்டாா். பெரியாகுறிச்சி அருகே சென்றபோது, பைக்கில் பின் தொடா்ந்து வந்த இருவா் ராஜலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து, மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளா் இளவழகி விசாரணை மேற்கொண்டு ராக்கி (எ) சபரிநாதன், ரவிகண்ணன், சூா்யா, சேவியா் ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட திருப்பூா்மாவட்டம், ஊத்துக்குளிஅடுத்துள்ள குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த ராக்கி (எ) சபரிநாதன் மீது 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில், கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் காவலில் அடைக்க உத்தரவிட்டதின் பேரில் சபரிநாதனுக்கு சனிக்கிழமை ஆணை வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.