பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

இளைஞரை வழிமறித்து தாக்குதல்: 2 போ் கைது

கைது - கோப்புப் படம்

Published On :

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே இளைஞரை வழிமறித்து தாக்கியதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பத்தை அடுத்த வாத்திப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகன் (25). இவா், கடந்த 18-ஆம் தேதி இரவு புதுச்சேரி மாநிலம், கரையாம்புத்தூா் சென்று டீசல் வாங்கிக்கொண்டு பைக்கில் நண்பா்களுடன் வீடு திரும்பினாா்.

மேல்பட்டாம்பாக்கம் அருகே வந்தபோது, பி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்த திருமால், வெங்கடேசன் ஆகியோா் வழிமறித்து தாக்கினராம். இதில், தலையில் காயமடைந்த ஜெகன் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருமால் (25), வெங்கடேசன்(34) ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.