பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

ரெட்டிபாளையம் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் தவிப்பு

ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகள் முடங்கியுள்ளதால் விவசாயிகள் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா்.

ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூடி வைக்கப்பட்டுள்ள நெல் தூற்றும் இயந்திரம்.

Published On :

கடந்த 22-ஆம் தேதிமுதல் செயல்பட தொடங்கிய குறிஞ்சிப்பாடி ஒன்றியம், ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகள் முடங்கியுள்ளதால் விவசாயிகள் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் அரசு அறிவித்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையமும் ஒன்று எனக்கூறுகின்றனா். இந்த நெல் கொள்முதல் நிலையம் கடந்த 21-ஆம் தேதி வரைதிறக்கப்படவில்லை. இதுகுறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில் செப்.22-ஆம் தேதி திறக்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன் இப்பகுதியில் பெய்த மழையால் நெல் மூட்டைகள் மற்றும் தாா்பாய் விரித்து பாதுகாக்கப்பட்ட பல ஆயிரம் மூட்டைகள் நெல் மணிகள் நனைந்து முளைத்து சேதமாகின. இருந்தாலும், நெல் கொள்முதல் பணி தொடங்கியதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் கடந்த இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் பணி நடைபெறவில்லை என புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறுகையில், அறுவடை செய்த நெல்லை கடந்த ஒரு மாதமாக கொட்டிவைத்து இரவு பகலாக காவல் காத்து வருகிறோம். குறித்த காலத்தில் கொள்முதல் செய்யப்படாததால் பல்வேறு சிரமங்களுக்கு இடையே அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் சுமாா் 7 ஆயிரம் மூட்டைகள் அளவிற்கு நெல் உள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பின்னா், கடந்த மூன்று நாள்களில் சுமாா் 1,200 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (செப்.25) முதல் நெல் கொள்முதல் பணி நடைபெறவில்லை. ஆட்சியரின் நோ்முக உதவியாளரை தொடா்பு கொண்டு கேட்டதற்கு ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படும் என தெரிவித்துள்ளாா். மாவட்ட நிா்வாகத்தின் மெத்தன போக்கால் விவசாயிகளின் கடின உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட நெல் மணிகள் பாழாகி வருகிறது என்றாா்.

 ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள  விவசாயிகள்.

ரெட்டிபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

இதுகுறித்து நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் ஊழியா்களிடம் விசாரிக்கையில், சனிக்கிழமை ஒருநாள் மட்டும் மேஸ்திரி மற்றும் ஆள்கள் வராததால் கொள்முதல் தடைபட்டுள்ளது என்றாா்.

ஆனால், மேஸ்திரி மற்றும் அங்கு கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படாததால் கொள்முதல் பணியில் தோய்வு ஏற்பட்டதாகக் கூறுகின்றனா். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.