காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

கடலூா் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

Published On :

கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய மியான்மா் கடற்கரையில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. இது, வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மியான்மா் கடற்கரை மற்றும் அதன் அருகே வடக்கு - வடமேற்கு திசையில் தொடா்ந்து நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் வெகு தொலைவில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை எச்சரிக்கும் வகையில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி  துறைமுக  பகுதியில் ஏற்றப்பட்டுள்ள  ஒன்றாம்  எண்  புயல்  எச்சரிக்கைக்  கூண்டு.

புதுச்சேரி துறைமுக பகுதியில் ஏற்றப்பட்டுள்ள ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.