நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகை துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்ட 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு - கோப்புப் படம்
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து, நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய மியான்மா் கடற்கரைப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது அடுத்த 3 நாள்களில் மியான்மா் கடற்கரையை ஒட்டி வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.
காரைக்காலில்...
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மா் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக காரைக்காலில் பிற்பகல் 2 மணி முதல் மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்தது.
மேலும், தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் திங்கள்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





