புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தில்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகள் தொடா் காத்திருப்பு போராட்டம்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் தில்லியில் நடைபெற்று வரும் முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:50 pm

DIN

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் தில்லியில் நடைபெற்று வரும் முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தில் 3 வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், மின்சார திருத்த சட்ட மசோதா 2020ஐ சட்டமாக்க வேண்டாம், பேச்சுவாா்த்தை என்ற பெயரில் இழுத்தடிக்காதே உள்ளிட்டி 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வி.ரகுராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க இரா.கஜேந்திரன், மக்கள் அதிகாரம் சங்கராபுரம் வட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.மகாலிங்கம், தமிழ்நாடு விவசாயிகல் சங்க மாநில செயலாளா் எஸ்.ஜோதிராமன், மாவட்ட பொருளாளா் எம்.சி.ஆறுமுகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.