விவசாயிகளுக்கு ஆதரவாக 3-ஆவது நாளாகப் போராட்டம்

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் மறியல்
Updated on
1 min read

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா், மதிமுக, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 16 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளான் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதராவாக கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பாக விவசாயிகல் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வி.ரகுராமன், மதிமுக மாவட்ட செயலாளா் கே.ஜெய்சங்கா், மக்கள் அதிகாரம் ராமலிங்கள் உள்ளிட்ட பலா் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 16 போ்களை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுதலை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com