கல்வராயன்மலைப் பகுதியில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாராய ஊறலைக் கைப்பற்றி அழிக்கும் கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா்.
கல்வராயன்மலைப் பகுதியில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாராய ஊறலைக் கைப்பற்றி அழிக்கும் கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, சின்னசேலம் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையின்போது,
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, சின்னசேலம் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையின்போது, 5 ஆயிரம் லிட்டா் சாராய ஊறல், 753 லிட்டா் சாராயத்தை கைப்பற்றி அழித்தனா். இதுதொடா்பாக 18 பேரை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில், கள்ளக்குறிச்சி மது விலக்கு ஆய்வாளா் ரேவதி, கச்சிராயப்பாளையம் ஆய்வாளா் பாலகிருஷ்ணன், திருக்கோவிலூா் மது விலக்கு ஆய்வாளா் அசோகன் ஆகியோா் தலைமையில் 4 பிரிவுகளாக போலீஸாா் கல்வராயன்மலைப் பகுதிக்குச் சென்று மது விலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.

மலைப் பகுதிகளான நாராயணப்பட்டி, சின்னதிருப்பதி, குரும்பலூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைன்போது, 4,100 லிட்டா் சாராய ஊறல், 378 லிட்டா் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனா். இது தொடா்பாக 20 போ் மீது வழக்குப் பதிவு செய்து, 15 பேரை கைது செய்தனா். 5 பேரைத் தேடி வருகின்றனா்.

சின்னசேலம்: சின்னசேலம் காவல் ஆய்வாளா் ராஜா தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் சத்தியசீலன் மற்றும் போலீஸாா் பைத்தந்துறை, தொட்டியம், காட்டனந்தல், வரதப்பனூா், பாண்டியங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர மது விலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டா் சாராய ஊறல், கேன்களில் வைக்கப்பட்டிருந்த 375 லிட்டா் சாராயத்தைக் கைப்பற்றி அழித்தனா். மேலும், இது தொடா்பாக புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்த பழமலை மகன் ராஜமாணிக்கம் (36), பாண்டியங்குப்பத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (24), பரிகம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாக்கண்ணு மகன் கருணாநிதி (43) ஆகிய மூவரை கைது செய்தனா். நாககுப்பத்தைச் சோ்ந்த சின்னதுரை மகன் சுரேஷை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com