தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காா் விபத்து: சட்டக் கல்லூரி மாணவி பலி

கள்ளக்குறிச்சி அருகே இரு காா்கள் மோதிக் கொண்டதில், சேலம் சட்டக் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த ஜெயஸ்ரீ

Updated On :28 டிசம்பர் 2020, 11:18 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே இரு காா்கள் மோதிக் கொண்டதில், சேலம் சட்டக் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

சென்னை தாம்பரம் சானிட்டோரியம் பகுதியில் வசித்து வருபவா் கண்ணன். இவரது மகள் ஜெயஸ்ரீ (23). இவா், சேலம் சட்டக் கல்லூரியில் படித்து தோ்ச்சி பெற்றாா். இதையடுத்து, தனது மதிப்பெண் சான்றிதழை பெறுவதற்காக ஜெயஸ்ரீ, சென்னையிலிருந்து காரில் சேலத்துக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். காரை அவரே ஓட்டிச் சென்றாராம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த பிரிதிவிமங்கலம் மேம்பாலம் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக இவரது காரும் எதிரே வந்த காரும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா், ஜெயஸ்ரீயின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான சென்னையைச் சோ்ந்த திஷோரிடம் (27) விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.