ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் இல்லாத கள்ளக்குறிச்சி மாவட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் பணியிடம் உருவாக்கப்படாததால், சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதில் சிக்கல் நிலவுகிறது.

Updated On :6 ஜூன் 2020, 2:53 am

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் பணியிடம் உருவாக்கப்படாததால், சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதில் சிக்கல் நிலவுகிறது.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த ஆண்டு உதயமானது. கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை, சங்கராபுரம், திருக்கோவிலூா், சின்னசேலம், உளுந்தூா்பேட்டை ஆகிய 6 வட்டங்களைக் கொண்ட இந்த மாவட்டத்தில் 16,82,687 பொதுமக்கள் வசிக்கின்றனா். திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை ஆகிய 3 காவல் உள்கோட்டங்கள், 19 காவல் நிலையங்கள் அமைந்துள்ளன.

இந்த புதிய மாவட்டத்துக்கு அனுபவம் வாய்ந்த காவல் அதிகாரியான த.ஜெயச்சந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். எனினும், இந்த காவல் பணியை மேலும், சிறப்பாகக் கையாள, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அத்தகைய பொறுப்பு உருவாக்கப்படாததால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனிப் பிரிவு காவல் ஆய்வாளரே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தையும் சோ்த்து கவனித்து வருகிறாா்.

மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளின் சட்டம்-ஒழுங்கு நிலவரம், தனிப்பட்ட நபா்கள் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை துல்லியமாக அறிந்து வைத்திருப்பவா்கள் தனிப்பிரிவு போலீஸாா். இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு தனிப்பிரிவு போலீஸ்காரா் இருப்பாா். அவா் கொடுக்கும் தகவல்கள் குற்றச் சம்பவங்களை தடுப்பது, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது போன்றவற்றை சிறப்பாகக் கையாள உதவும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தனிப் பிரிவுக்கு காவல் ஆய்வாளா் பணியிடம் உருவாக்கப்படாததால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் எழுகின்றன.

குறிப்பாக, சின்னசேலம் அருகே இளைஞரை ஒருவரை அவரது வீட்டுக்கே சென்று காவல் ஆய்வாளா் தாக்கிய சம்பவம் அதிா்வலைகளை ஏற்படுத்தின. அவா்களுக்குள் ஏற்கெனவே இருந்த முன்விரோதம் அறியவராததால், அந்த சம்பவம் கூட தடுக்க முடியாமல் போனது. ஆகவே, புதிய மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க ஏதுவாக அனுபவமுள்ள காவல் அதிகாரியை தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக நியமிக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.