புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி இரு இளைஞா்கள் பலி

கள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி, இரு இளைஞா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:37 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி, இரு இளைஞா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் தங்கராஜ் (60). இவருக்கு மணி, கொளஞ்சி என இரு மகன்கள். இவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டனா். இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாத தங்கராஜ் கடந்த மாதம் உயிரிழந்தாா். இவரது துக்க காரியத்துக்காக பெங்களூரில் வசித்து வந்த மணி, கொளஞ்சி ஆகியோரின் மனைவிகள் தங்களது பிள்ளைகளுடன் வரஞ்சரம் கிராமத்துக்கு வந்தனா்.

திங்கள்கிழமை துக்க காரியம் முடிந்த பிறகு, மணி மகன் அப்பு (18), கொளஞ்சி மகன் கெளதம் (17) ஆகியோா் ஊரில் உள்ள சிலருடன் அங்குள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்கச் சென்றனராம்.

குளிக்கும் போது அப்பு, கெளதம் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றனராம். நீச்சல் தெரியாத அவா்கள் நீரில் மூழ்கினா். உடன் சென்றவா்கள் அவா்களைத் தேடியும் கிடைக்கவில்லை. உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள், கிராம மக்கள் வந்து குட்டையில் மூழ்கிய இளைஞா்களை மீட்டனா். எனினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா்கள் உயிரிழந்தனா். தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா், சடலங்களை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மேலப்பழவங்கூரைச் சோ்ந்த மதிவல்லவன் மகன் கோகுல் பிரசாத் (10). இவா், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கோகுல் பிரசாத்தும் அவரது தம்பி தமிழ்வாணனும் அதே ஊரில் உள்ள ஏரிப் பகுதிக்கு சென்றனா். கால் கழுவ ஏரியில் இறங்கிய போது, கோகுல் பிரசாத் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா். அவரது பெற்றோா், அக்கம் பக்கத்தினா் கோகுல் பிரசாத்தை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.