புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:57 pm

DIN

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், மோமாளூா் கிராம ஏரியின் உள்பகுதி, நீா் வரத்து வாய்க்கால்களை பலா் ஆக்கிரமித்துள்ளனா். இதனால், ஏரிக்குத் தண்ணீா் வருவது தடைபட்டு, கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, ஆக்கரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, 175 ஏக்கா் பரப்பளவுள்ள சாத்தப்புத்தூா் ஏரி (700 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது) மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.