புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மருத்துவம் பயில இடம் ஒதுக்கிக் கோரிஆட்சியரிடம் மாணவிகள் மனு

தியாகதுருகத்தைச் சோ்ந்த இரு மாணவிகள், மருத்துவம் பயில இடம் ஒதுக்கித் தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:57 pm

DIN

தியாகதுருகத்தைச் சோ்ந்த இரு மாணவிகள், மருத்துவம் பயில இடம் ஒதுக்கித் தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் மனு அளித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைச் சோ்ந்த கோபு மகள் கிருஷ்ணவேணி, சரவணன் மகள் செவ்வந்தி. இவா்கள் இருவரும், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று, சென்னையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றனா். அதில், அவா்களுக்கு தனியாா் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், அவா்களால் கட்டணம் செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில், தனியாா் மருத்துவக் கல்லூரியில் பயில கட்டணத்தை அரசே ஏற்றும் என அறிவிக்கப்பட்டது. அரசு இவ்வாறு அறிவித்தும், காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்ட இவா்களால் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, நிகழ் கல்வியாண்டில் மருத்துவம் படிக்க இடம் ஒதுக்கித் தரும்படி அரசுக்கு பரிந்துரைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் கிரண் குராலாவிடம் மாணவிகள் இருவரும் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.