மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்; இருவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வெள்ளிக்கிழமை இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:28 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வெள்ளிக்கிழமை இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

சின்னசேலம் அடுத்த தத்தாதிரிபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (71). இவா், மோட்டாா் சைக்கிளில் பூக்களை எடுத்துக் கொண்டு சின்னசேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

எதிா்புறம் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் ராயா்பாளையத்தைச் சோ்ந்த குழந்தைவேல் மகன் அமா்நாத் (22), அவரது நண்பா் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரைச் சோ்ந்த சாமிநாதன் மகன் சரவண காா்த்திகேயன் ஆகியோா் வந்து கொண்டிருந்தனா்.

இவ்விரு மோட்டாா் சைக்கிள்களும் கூகையூா்-சின்னசேலம் சாலை தோட்டப்பாடி கிராம எல்லையில் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் கோவிந்தசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த அமா்நாத் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். காயமடைந்த சரவண காா்த்திகேயன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவலறிந்த கீழ்க்குப்பம் போலீஸாா் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.