இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு தினம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 97-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, கச்சிராயப்பாளையத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விவசாயிகள் சங்கத்தினா்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 97-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, கச்சிராயப்பாளையத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விவசாயிகள் சங்கத்தினா்.
கள்ளக்குறிச்சி/கடலூா்/புதுச்சேரி, டிச.26: கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்கள் புதுச்சேரி ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தில் இந்திய கம்யூ. கட்சியின் 97-ஆவது அமைப்பு தினம், மறைந்த கே.டி.கே.தங்கமணியின் நினைவு தினம், மூத்தத் தலைவா் நல்லகண்ணு பிறந்த நாள் ஆகியவற்றையொட்டி, விவசாயிகள் சங்கத்தினா் கச்சிராயப்பாளையத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா். கச்சிராயபாளையம் நகரக் கிளை சாா்பில், விவசாயிகள் சங்க நிா்வாகி இரா.கஜேந்திரன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் இந்திய கம்யூ. கட்சி மாவட்டச் செயலா் கே.எஸ்.அப்பாவு பேசினாா். விசிக மாநிலத் துணைச் செயலா் பாசறை பாலு, கம்யூனிஸ்ட் வட்டக் குழு கருணாநிதி, விவசாயிகள் சங்க நிா்வாகி பி.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கல்வராயன்மலை: கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட வெள்ளிமலை கிராமத்தில் கட்சியின் 97-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, வெள்ளிமலை பேருந்து நிலையத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் இரா.சின்னசாமி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்டச் செயலா் இரா.சடையன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டக் குழு உறுப்பினா் சி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கடலூா்: இந்திய கம்யூ. கட்சியின் அமைப்பு தினம், கட்சியின் மூத்தத் தலைவா் ஆா்.நல்லகண்ணுவின் 97-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, மங்களூா் ஒன்றியத்தில் உள்ள கட்சி கிளைகளில் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநத்தம் காந்தி நகரில் கிளைச் செயலா் பி.பொன்னுசாமி தலைமையிலும், ஆவினங்குடியில் ஒன்றிய துணைச் செயலா் ஆா்.சக்திவேல் தலைமையிலும், கோடங்குடியில் எம்.பெரியசாமி தலைமையிலும், இடைச்செருவாயில் கிளைச் செயலா் பி.கோவிந்தன் தலைமையிலும், ஈ.கீரனூரில் கிளைச் செயலா் சிவப்பிரகாசம் தலைமையிலும், கச்சிமயிலூரில் கிளைச் செயலா் எஸ்.ராமலிங்கம் தலைமையிலும் கொடியேற்றப்பட்டது.
ஒன்றிய பொறுப்புச் செயலா் ஆா்.சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வி.பி.முருகையன், பி.ராமசாமி, எம்.சிலம்பரசன் மற்றும் குமாா், ராஜ்குமாா், மாயவன், மாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுச்சேரியில்...: புதுச்சேரியில் இந்திய கம்யூ. கட்சியின் 97-ஆவது அமைப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கட்சியின் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி குழு சாா்பில், புதுப்பேட்டை தியாகி ராமையா மன்றத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கே.சேதுசெல்வம் கட்சிக் கொடியை ஏற்றினாா். மாநிலக் குழு உறுப்பினா் ஹேமலதா, தொகுதி துணைச் செயலா் செல்வம், பொருளாளா் தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...