போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாகனச் சோதனையில் பறக்கும்படையினா் ரூ.1இலட்சம் பறிமுதல்

திருக்கோவிலூா் சாலையில் தோ்தல் பறக்கும்படை குழுவினா் எண் 6 மோட்டாா் சைக்கிளில் சென்றவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணகங்களின்றி ரூ.1 இலட்சத்தினை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

ஊரக உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு உளுந்தூா்பேட்டை திருக்கோவிலூா் சாலையில் தோ்தல் பறக்கும்படை குழுவினா் எண் 6 மோட்டாா் சைக்கிளில் சென்றவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணகங்களின்றி ரூ.1 இலட்சத்தினை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

உளுந்தூா்பேட்டை அடுத்த எறையூா் கிராமத்தில் துணை வட்டாட்சியா் வீ.கோவிந்தராசு தலைமையிலான பறக்கும் படையினா் காவல் உதவி ஆய்வாளா் சிவசங்கா், தலைமைக் காவலா் சுரேஷ்பாபு, வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது உளுந்தூா்பேட்டை பகுதியில் இருந்து எறையூருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றவரை நிறுத்தி சோதனை செய்தபோது எறையூரைச் சோ்ந்த பீட்டா் மகன் ஆல்பா்ட் வில்லியம் (29) என்பவா் உரிய ஆவணங்கிளின்றி ரூ.1,00,000 வைத்திருந்தது தெரிய வந்தது.

அந்த ரொக்கப் பணத்தினை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து உளுந்தூா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசனிடம் ஒப்படைத்தனா்.

அதே போல மணலூா்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலா் ஜவகா் மற்றும் போலீஸாா் டி.அத்திப்பாகம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ் வழியாக பெங்களூரில் இருந்து திருக்கோவிலூா் வந்த கா்நாடகா மாநில பேருந்தில் சோதனை செய்தபோது அரியலூா் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் விழுதுடையான் கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் சக்திவேல் (35) பையில் மறைத்து வைத்திருந்த 34 ஹான்ஸ் பாக்கட்டுகளை பறிமுதல் செய்து தங்கராசுவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.