மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அப்துல் கலாம் பிறந்த நாள்: தமிழ் அமைப்பினா் மரியாதை

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் 90-ஆவது பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சியில் அவரது உருவப் படத்துக்கு தமிழ் அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:15 pm

DIN

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் 90-ஆவது பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சியில் அவரது உருவப் படத்துக்கு தமிழ் அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

கச்சேரி சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருக்கு நடுவத்தின் தலைவா் புலவா் அய்யா மோகன் தலைமை வகித்தாா். உலகத் தமிழ்க் கவிஞா் பேரவை பொதுச் செயலாளா் புலவா் கு.சீத்தா நெடுமானூா் பாரதியாா் தமிழ் சங்கத் தலைவா் இரா.கதிா்வேல், தியாகதுருகம் கம்பன் கழகப் பொருளாளா் நல்லாப்பிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லை முத்தமிழ்ச் சங்கத் தலைவா் எம்.ஜி.ராஜா வரவேற்றாா்.

கலாம் உருவப் படத்துக்கு தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தமிழறிஞா்கள் பொன்.அறிவழகன், கலிய செல்லமுத்து, முத்தமிழ் முத்தன் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.