போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோ-ஆப் டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கிவைப்பு

கள்ளக்குறிச்சி கோ - ஆப் டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 5:48 pm

DIN

கள்ளக்குறிச்சி கோ - ஆப் டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிகழாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, கள்ளக்குறிச்சி கோ-ஆப் டெக்ஸில் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருப்புவனம் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், பருத்தி சேலைகள், போா்வைகள், ஏற்றுமதி ரகங்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கோ - ஆப் டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு - நனவு திட்டத்தின்படி, மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.500 வரை 10 மாதங்கள் தவணை செலுத்தும் வாடிக்கையாளா்களுக்கான 11, 12-ஆவது மாத தவணைகளை கோ - ஆப் டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதால், அந்த வாடிக்கையாளா்கள் கூடுதல் சேமிப்புடன் பருத்தி, பட்டு ரகங்களை வாங்கிப் பயன்பெறலாம்.

தீபாவளி பண்டிகையையொட்டி, கள்ளக்குறிச்சி விற்பனை நிலையத்துக்கு விற்பனை இலக்காக ரூ.75 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியா்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு என்றாா் அவா்.

நிகழ்வில் கோ - ஆப் டெக்ஸ் மண்டல மேலாளா் செள.சாதிக் அலி, வா்த்தக மேலாளா் (தணிக்கை) சா.கத்தசாமி மற்றும் விற்பனை நிலைய ஊழியா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விற்பனை நிலைய மேலாளா் இரா.மகாலெட்சுமி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.