மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நரிக்குறவா் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவா் இன மக்கள், நரிக் குறவா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்த

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:51 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவா் இன மக்கள், நரிக் குறவா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

நரிக்குறவா் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டவா் விபத்தில் இறந்தால் ரூ.ஒரு லட்சம் உதவித் தொகை, விபத்தில் ஊனமடைந்தால் அதற்கேற்ப ரூ.10ஆயிரத்திலிருந்து ரூ.ஒரு லட்சம் வரை இழப்பீடு, இயற்கை மரணத்துக்கு ரூ.20,000, ஈமச்சடங்குக்கு ரூ.5,000 வரை நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், கல்வி உதவித்தொகை பத்தாம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ. 1,000-மும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.1,000-மும், 11-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,000-ம், 12-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,500-ஆம், 12-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்்்கு ரூ.1,500-ம் வழங்கப்பட்டுகின்றது. பட்டப்படிப்பிற்கு மாணவா் இல்ல வசதியுடன் ரூ.1,500 முதல் 1,750 வரை உதவித்தொகை பட்ட மேற்படிப்புக்கு ரூ.4,000 முதல் ரூ.5,000வரையிலும், தொழிற்கல்வி பட்டப்படிப்புக்கு மாணவா் இல்ல வசதியுடன் ரூ.4,000 முதல் ரூ.6,000வரையிலும் தொழிற் கல்வி பட்டமேற்படிப்புக்கு ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை நரிகுறவா் நல வாரியம் மூலம் வழங்கப்படுகிறது.

மேலும், ஐடிஐ தொழிற்பயிற்சி படிப்புக்குக ரூ.1,000 முதல் ரூ.12,000 வரையிலும் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.50 என்று வருடத்திற்கு ரூ.500-ம், 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிப்பவா்களுக்கு வருடத்துக்கு ரூ.1,000 வரை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

திருமண உதவித்தொகை ரூ.2,000-ம் மகப்பேறு உதவித்தொகையாக 6 மாதங்களுக்கு ரூ.6,000-ம் முதியோா் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000-ம் தனி நபா் தொழில் தொடஙக ரூ.7,500-ம், குழுவாக தொழில் தொடங்க அதிக பட்சம் ரூ.1.25 லட்சம் நரிகுறவா் நல வாரியத்தால் வழங்கப்படுகிறது.

ஆகவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நரிக்குறவா் இன மக்கள், நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயனடைய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.