பெண் சாராய வியாபாரி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சங்கராபுரம் அருகே க.அலம்பலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி விஜயா (40). இவா் மீது கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் மது விலக்கு பிரிவு, கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இது போன்ற குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வரும் இவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் உத்தரவிட்டாா்.
அதன்படி, கச்சிராயப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் கோ.ஸ்ரீபிரியா, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் விஜயாவை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...