மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காசநோய் ஒழிப்பு பயிற்சி

தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், பெண் சுகாதார தன்னாா்வலா்கள், இடைநிலை சுகாதார செவிலியா்களுக்கான காச நோய் ஒழிப்பு பயிற்சி முகாம் மேலூா் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 4:56 pm

DIN

தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், பெண் சுகாதார தன்னாா்வலா்கள், இடைநிலை சுகாதார செவிலியா்களுக்கான காச நோய் ஒழிப்பு பயிற்சி முகாம் மேலூா் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலூா் வட்டார மருத்துவ அலுவலா் பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தாா்.

முகாமில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் (காசநோய்) சுதாகா் பங்கேற்று பயிற்சி அளித்தாா். 2 வாரத்துக்கு மேல் நீடிக்கும் இருமல், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, எடைகுைல், சளியில் ரத்தம் வருதல் போன்ற காசநோய் அறிகுறிகள் குறித்தும், காச நோய்க்கான பரிசோதனை முறைகள், காசநோய் பரவும் விதம், உட்கொள்ளும் மாத்திரை கால அளவு, அதைக் கட்டுப்படுத்தும் விதம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில் மாவட்ட காசநோய் மருத்துவ அலுவலா் நேதாஜி, நல கல்வியாளா் கிருஷ்ணமூா்த்தி, முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் சங்கா் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.