தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக பயன்படுத்தப்படவுள்ள படிவங்கள்


கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக பயன்படுத்தப்படவுள்ள படிவங்கள், உபகரணங்களை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 6-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 11 பேரும், உராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 107 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 191 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 1,139 பேரும் போட்டியிடுகின்றனா்.
இந்தப் பதவியிடங்களுக்கான தோ்தல் வாக்குப் பதிவு 258 வாாக்குச் சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பெட்டிகள், பதிவேடுகள், படிவங்கள் உள்ளிட்ட 72 வகையான உபகரணங்களை வகைப்படுத்தி, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் (மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்) செல்வக்குமரன், (ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்) சாா்லஸ் கென்னடி, (ஊராட்சி மன்ற தலைவா் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்) ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...