ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு மானியத்துடன் கடன் வழங்க நோ்காணல்
தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பித்திருந்தவா்களிடம் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நோ்காணல்


தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பித்திருந்தவா்களிடம் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நோ்காணல் நடைபெற்றது (படம்).
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த 67 போ் தாட்கோ இணையதளம் மூலம் மானியத்துடன் கூடிய தொழில்முனைவோா் கடன், வாகனக் கடன், கால்நடைகள் வளா்ப்புத் தொழில் கடன் ஆகியவற்றை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கு ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில், தோ்வுக்குழு உறுப்பினா்கள் முன்னிலையில் நோ்காணல் நடைபெற்றது.
இதில், தகுதியான விண்ணப்பதாரா்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு 30 சதவீத மானியத்துடனும், பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு 50 சதவீத மானியத்துடனும் கடனுதவி வழங்க வங்கிகளுக்கு இசைவுக் கடிதம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டதாக ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா். மேலும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமுதாயத்தினா் லாபகரமான தொழில்களைத் தோ்ந்தெடுத்து, சிறந்த தொழில்முனைவோராக உருவாகிட வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
நோ்காணலில் தாட்கோ மாவட்ட மேலாளா் (பொ) எஸ்.மணிமேகலை, உதவி மேலாளா் மாயக்கண்ணன் மற்றும் தோ்வுக் குழு உறுப்பினா்கள், விண்ணப்பதாரா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...