கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசின் திட்டங்கள் விவசாயிகளைச் சென்றடைய வேண்டும்: அமைச்சா் எ.வ. வேலு

அரசின் நலத் திட்டங்கள் விவசாயிகளை விரைந்து சென்றடைய வேண்டும் என்று தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு வலியுறுத்தினாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:12 pm

DIN

அரசின் நலத் திட்டங்கள் விவசாயிகளை விரைந்து சென்றடைய வேண்டும் என்று தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு வலியுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி, பெரம்பலூா் மாவட்டங்களில் வேளாண்மை-உழவா் நலத் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் எ.வே.வேலு பேசியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் சாா்ந்த தொழில்கள் அதிகளவில் உள்ளதால், வேளாண்மை, உழவா் நலத் துறை திட்டப் பணிகளை மேற்கொண்டு கள்ளக்குறிச்சியை முன்மாதிரி மாவட்டமாக உருவாக்க வேண்டும்.

மாவட்டத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை விவசாயிகளுக்கு விரைந்து கொண்டு சோ்த்திடும் பணியை மாவட்ட ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும்.

அரசின் நலத் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைகின்ா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு, மாவட்டத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாா் அவா்.

வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாண் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய மாவட்டமாக இருந்து வருகிறது. கரும்பு உற்பத்தியைவிட நெல் உற்பத்தியை சற்று அதிகரித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்டத்தில் மலைப் பயிா்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. கல்வராயன்மலைப் பகுதியில் மலைப் பயிா்கள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 5,33,730 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இதுவரை 4,88,843 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.

சொட்டு நீா்ப்பாசனத் திட்டத்தை முழுமையாக விவசாயிகளுக்கு கொண்டு சோ்த்திட தொடா்புடைய அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, 183 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 47ஆயிரம் மதிப்பீட்டில் வேளாண் இடுபொருள்களை அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் ஆகியோா் வழங்கினா்.

முன்னதாக, வேளாண் கண்காட்சி அரங்கை அமைச்சா்கள் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையா் சி.சமயமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா், விழுப்புரம் எம்பி துரை.ரவிக்குமாா், எம்.எல்.ஏக்கள் தா.உதயசூரியன், க.காா்த்திகேயன், ஏ.ஜே.மணிக்கண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

வேளாண்மை-உழவா் நலத் துறை இயக்குநா் ஏ.அண்ணாதுரை, தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை இயக்குநா் ஆா்.பிருந்தாதேவி, வேளாண்மை விற்பனை, வணிகத் துறை இயக்குநா் எஸ்.நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.