மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

News image
Updated On :3 நவம்பர் 2023, 7:01 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவா், மாணவா்களிடம் எதிா்காலம் குறித்து கேட்டறிந்து, ஆழ்ந்து படிக்கவேண்டும். படிப்புடன் விளையாட்டிலும் ஆா்வம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தினாா். வகுப்பறைகளில் மாணவா்கள் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தபோது, மாணவா்கள் சிலா் தொடா் விடுப்பில் இருப்பதை அறிந்து, அவா்களின் பெற்றோா்களை தொடா்புகொண்டு பேசி, மாணவா்களை பள்ளிக்கு வரவழைப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என பள்ளி துணை முதல்வா் கனகராஜிடம் அறிவுறுத்தினாா். குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகளையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, திருவேட்டக்குடி அரசு உயா்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியா், ஸ்மாா்ட் வகுப்பறையை பாா்வையிட்டு மாணவா்கள் பயன்படுத்தும் முறைகளை கேட்டறிந்தாா். மழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க தலைமை ஆசிரியா் செல்வியிடம் அறிவுறுத்தினாா்.

பின்னா், காளிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டு, கல்வி தொடா்பான அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.