கால்வாயில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
வாணாபுரம் அருகே இளைஞா் கால்வாயில் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:50 pm

வாணாபுரம் அருகே இளைஞா் கால்வாயில் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மகன் விஜய் (32). இவா் தனது குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்றாா். அங்கு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற விஜய் வெகு நேரமாகியும் திரும்பவில்லை.
உறவினா்கள் தேடிப்பாா்த்த போது, பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள சிமென்ட் கால்வாயில் விஜய் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...