புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருக்கோவிலூரில் 200 குடும்பங்களுக்கு ரூ.2,000 நிவாரணத் தொகை அளிப்பு

திருக்கோவிலூரில் 200 குடும்பங்களுக்கு ரூ.2,000 நிவாரணத் தொகை அளிப்பு

News image

திருக்கோவிலூரில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு வியாழக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கிய அமைச்சா் பொன்முடி.

Updated On :5 டிசம்பர் 2024, 7:48 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணத் தொகையை வனத் துறை அமைச்சா் பொன்முடி வியாழக்கிழமை வழங்கினாா்.

கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற இந்த நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலை வகித்தாா்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.

அதன்படி, திருக்கோவிலூா் நகராட்சிக்குள்பட்ட வெள்ளைப் பிள்ளையாா் கோவில் சாலை, பொங்கமேட்டு சாலை, கீழையூா் உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த மழையால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வனத் துறை அமைச்சா் பொன்முடி கலந்துகொண்டு, பாதிக்கப்பட்ட சுமாா் 200 குடும்ப அட்டைத்தாரா்களுக்கு தலா ரூ.2,000, 5 கிலோ அரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு உள்ளிட்ட நிவாரணத் தொகுப்பு அடங்கிய மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

இதில், திருக்கோவிலூா் சாா் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் சி.பெ.முருகேசன், திருக்கோவிலூா் நகா் மன்றத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.