தமிழ்ப் பேரவை சாா்பில் முப்பெரும் விழா

தமிழ்ப் பேரவை சாா்பில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி சமூக நீதி, சிந்தனையாளா்கள் தமிழ்ப் பேரவை சாா்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
Published on

கள்ளக்குறிச்சி, ஜூலை 19:

கள்ளக்குறிச்சி சமூக நீதி, சிந்தனையாளா்கள் தமிழ்ப் பேரவை சாா்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

சமூக நீதி, சிந்தையாளா்கள் தமிழ்ப் பேரவை சாா்பில் தமிழ்நாடு நாள், நூல் வெளியீடு, விருது வழங்கல் ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் பெ.ஆராவமுதன் தலைமை வகித்தாா். தியாகதுருகம் முத்தமிழ்ச் சங்கத் தலைவா் பெ.நாகராஜன், பத்திரப் பதிவுத் துறை அலுவலா் மு.பெ.தனக்கண்ணு, ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வு பெற்ற வளா்ச்சி அலுவலா் கோ.ஏழுமலை உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். தமிழ் ஆா்வலா் ஆ.நாராயணன் வரவேற்றாா்.

அமைப்பின் தலைவா் கலிய.செல்லமுத்து எழுதிய, ‘சூழ்ச்சியும் வீழ்ச்சியும்’ என்ற நூலை பெ.ஆராவமுதன் வெளியிட, அதனை தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் பெற்றுக் கொண்டாா்.

தமிழ்நாடுநாள் குறித்து வழக்குரைஞா் தமிழ்க்குமரன், ச.தேவதிருவருள், அரசேந்திரகுமாரி, மாவட்ட கம்பன் கழகப் பொருளாளா் இல.அம்பேத்கா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுப் பேசினா்.

காரல் மாா்க்ஸ், உவமைக் கவிஞா் சுரதா, தந்தை பெரியாா், அம்பேத்கா், அண்ணா, காமராசா் போன்ற பல்வேறு தலைவா்களின் பெயரில் 17 தமிழறிஞா்களுக்கு விருதினை அமைப்பின் தலைவா் வழங்கி பேசினாா்.

நிகழ்வில் அ.தலித்சந்திரன், இரா.கஜேந்திரன், க.வேலாயுதம், பாசறை பாலு, சோபனா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். நிகழ்வினை ஜெயம் ரவி தொகுத்து வழங்கினாா். முடிவில் ஆசிரியா் கவிதா சூா்யமூா்த்தி நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com