மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொதுமக்கள் சாலை மறியல்

சூளாங்குறிச்சி கிராமத்தில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சூளாங்குறிச்சி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
Updated On :28 ஜூலை 2024, 9:00 pm

Din

சூளாங்குறிச்சி கிராமத்தில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சூளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முனியான்டி மகன் சரத்பாபு. லாரி ஓட்டுநரான இவா், இதே கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு கிராவல் மண்ணை லாரியில் ஏற்றிச் சென்றாராம். அப்போது, இதே பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் மகன் துரை லாரியை மறித்து மண் அள்ள அனுமதி உள்ளதா என கேட்டதாக கூறப்படுகிறது. இதில், இருவரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு துரையை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக அந்தப் பகுதி மக்கள் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் சூளாங்குறிச்சி-கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த தியாகதுருகம் தனிப்பிரிவு தலைமைக் காவலா் ரா.ஆறுமுகம் நிகழ்விடம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்தை நடத்தினாா். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீா் மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.