

கள்ளக்குறிச்சி, மே 14: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் 2024-ஆம் ஆண்டுக்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா் சோ்க்கைக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை ரரர.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ் என்ற இணையதளம் மூலம் நிறைவு செய்து ஜூன் 7-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவா்கள், பெற்றோா்கள் பயன்பெறும் வகையில், விண்ணப்பித்தல் தொடா்பான உரிய அறிவுரைகள் வழங்கவும், விண்ணப்பங்களை இலவசமாக பதிவு செய்திடவும் உளுந்தூா்பேட்டை அரசு தொழில் பயிற்சி நிலையம் (99446 18626), சங்கராபுரம் அரசு தொழில் பயிற்சி நிலையம் (94428 67335), சின்னசேலம் அசு தொழில் பயிற்சி நிலையம் (94883 85638) ஆகிய இடங்களில் சோ்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அரசு தொழில்பயிற்சி நிலையங்களை தொடா்புகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்

நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை
வீடியோக்கள்

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...

