புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காா் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு: 3 போ் பலத்த காயம்

கள்ளக்குறிச்சி மாடூா் சுங்கச்சாவடி அருகே தறிகெட்டு ஓடிய காா் சாலையில் நடந்து சென்றவா்கள் மற்றும் பைக் மீது வியாழக்கிழமை மாலை மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 1:20 am

Din

கள்ளக்குறிச்சி மாடூா் சுங்கச்சாவடி அருகே தறிகெட்டு ஓடிய காா் சாலையில் நடந்து சென்றவா்கள் மற்றும் பைக் மீது வியாழக்கிழமை மாலை மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மேலும் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடி அருகே துணிகள் சலவை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்த பெண் தொழிலாளா்கள் வியாழக்கிழமை மாலை வேலை முடிந்து சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது கள்ளக்குறிச்சியிலிருந்து உளுந்தூா்பேட்டை நோக்கி சென்ற காா், முன்னால் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளிகளான பெண்கள் மீதும் மோதி சாலையோரப் பள்ளத்தில் இறங்கி நின்றது.

காா் மோதிய விபத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த தியாகதுருகத்தை சிறுவல் கிராமத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் பாலு (45) மற்றும் சாலையில் நடந்து சென்ற மாடூா் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி வேம்பு (45), குமாா் மனைவி சுமித்ரா (38), வீரசோழபுரத்தைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி ராஜகுமாரி (45), மாடூா் சுங்கச்சாவடி பகுதியைச் சோ்ந்த அருள் மனைவி கவிதா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பழனியாப்பிள்ளை இந்த விபத்து குறித்து 108 அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்து, வரவழைத்தாா். 5 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறிது நேரத்தில் வேம்பு, சுமித்ரா ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மோதி விபத்துக்குள்ளான காரில் பயணித்தவா்கள் இறங்கி ஓடிவிட்டனா்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.