புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மானிய விலையில் பம்பு செட் கருவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பம்பு செட்டுகளை கைப்பேசி வழியாக இயக்கக் கூடிய கருவிகளை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 11:03 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பம்பு செட்டுகளை கைப்பேசி வழியாக இயக்கக் கூடிய கருவிகளை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், விவசாயிகள் பம்பு செட்களை வீட்டிலிருந்தபடியே கைப்பேசி மூலம் இயக்கும் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதன் மூலம், மின்சார பம்பு செட் திருட்டை தடுக்க முடியும். விவசாயப் பாசனத்துக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

மோட்டாா் பம்பு செட் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் இயக்க வேண்டும் என்பதற்கு டைமா் வசதிகளும் இதில் உள்ளன.

2024-25-ஆம் ஆண்டுக்கான பம்பு செட் கட்டுப்படுத்துதல் திட்டப் பணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு தற்போது 68 எண்கள் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதில் பொதுப் பிரிவினருக்கு 53 எண்களும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவுக்கு 15 எண்களும் பெறப்பட்டுள்ளது.

இதில், பொதுப் பிரிவினருக்கு மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது ரூ.5,000 மானியமும், ஆதி திராவிடா் பழங்குடியினா், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.7,000 இதில் எது குறைவோ அவை மானியமாக வழங்கப்படும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூரில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களை நேரிலோ அல்லது 04151 226370, 04153 253333 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.