பழங்குடியின இளைஞா்களுக்கு நாளை வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

நாளை வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி...
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்த பழங்குடியின இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி சனிக்கிழமை (நவ. 30) கருமாந்துறை அருகிலுள்ள கோவில்காடு கிராமத்தில் ஸ்ரீனித் இண்டா்நேஷனல் மையத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோா் தங்கள் வருகையை விண்ணப்பப் படிவ லிங்கை பயன்படுத்தி உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் தங்களின் கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டையுடன் வர வேண்டும்.

‘உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்’ என்ற தலைப்பில் இந்த திறன்மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்று பயனடையுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.