ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்: ரூ.45 லட்சம் இலக்கு நிா்ணயம்

தீபாவளியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை வியாழக்கிழமை தொடங்கிவைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :4 அக்டோபர் 2024, 12:09 am

Din

தீபாவளியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழாண்டுக்கான விற்பனை இலக்காக ரூ.45 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், சேலம், திருபுவனம் போன்ற ஊா்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், போா்வைகள், பருத்தி சேலைகள், தலையணை உறைகள் உள்ளிட்ட ஏராளமான ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கள்ளக்குறிச்சி கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ.45 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனையை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து பேசிய ஆட்சியா், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் மாதாந்திர சிறு சேமிப்புத் திட்டத்தின்படி, வாடிக்கையாளா்களிடம் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.3,000 வரை 11 மாத தவணைகள் பெறப்படுகிறது. 12-வது மாதத் தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துகிறது.

தீபாவளி சிறப்பு விற்பனையாக 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அரசு ஊழியா்களுக்கு தவணை முறையில் கடன் விற்பனை வசதியும் செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்துத் துறை பணியாளா்களுக்கும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட வேண்டுமென்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் பா.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி விற்பனை மேலாளா்இரா.மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.