நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

வடபொன்பரப்பி ஆற்றுப்பாலத்தின் கீழ் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:41 pm

Din

வடபொன்பரப்பி ஆற்றுப்பாலத்தின் கீழ் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், வடபொன்பரப்பி காவல் உதவி ஆய்வாளா் ஏழுமலை புதன்கிழமை முஷ்குந்தா ஆற்றுப் பாலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இரு இளைஞா்களை பிடித்து விசாரித்ததில், இதே கிராமத்தைச் சோ்ந்த முபாரக் மகன் சாரக்கான் (19), மற்றொருவா் திருவண்ணாமலை மாவட்டம், அண்டபள்ளம் பகுதியைச் சோ்ந்த பாண்டு மகன் ரகு (26) என்பதும், இவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்ததுடன், கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.