செப். 28-இல் அரசுக் கல்லூரி வளாகத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில நகா்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை செப். 28-ஆம் தேதி நடத்துகின்றன.
வாணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
இதில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற தமிழக அளவிலும், கள்ளக்குறிச்சி மற்றும் மாவட்டத்தின் அருகில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளன.
இத் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஓட்டுநா் உள்ளிட்ட 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா், தோல்வியடைந்தோா், பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமா, அக்ரி, செவிலியா், ஆசிரியா் தகுதி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் படித்த 18 முதல் 40 வயதிற்குள்பட்ட வேலை நாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம்.
முகாமில் பங்கேற்போா் சுய விவரக் குறிப்புகள், அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
மேலும் முகாம் குறித்த விவரங்களுக்கு 8807204332- 04151-295422 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.