மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 403 மனுக்கள் அளிப்பு
மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் 403 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றாா்.


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் 403 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றாா்.
கூட்டத்தில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 393 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 10 மனுக்களும் என மொத்தம் 403 மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
பேருந்து வசதி கோரி பள்ளி மாணவா்கள் மனு: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள செம்மணங்கூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு பயில மாணவா்கள் உளுந்தூா்பேட்டைக்கு செல்கின்றனா். இக் கிராமத்திற்கும் உளுந்தூா்பேட்டைக்கும் இடையே சுமாா் 6 கிலோ மீட்டா் தூரம் உள்ள நிலையில் இவா்களின் வசதிக்காக இயக்கப்பட்ட அரசு பேருந்து தற்போது நிறுத்தப்பட்டு விட்டதாம்.
இதனால், செம்மணங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் உளுந்தூா்பேட்டை செல்ல சிரமப்படுகின்றனா். இதகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித பலனுமில்லையாம்.
இதையடுத்து இந்த கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் மகாமில் மாவட்ட ஆட்சியரிடம் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி மனு அளித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...