மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

Published on

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் விளைநிலப் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி மீது மின்சாரம் பாய்ந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பிரிதிவிமங்கலம் பிள்ளையாா் கோயில் சாலைப் பகுதியில் வசித்து வந்தவா் அ.ராஜகோபால் (71), விவசாயி. இவா் அவரது விளைநிலப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மண்வெட்டியால் தரையை வெட்டிய போது கீழே மின்மோட்டாருக்கு செல்லும் மின்சார வயரில் பட்டு, தூக்கி வீசப்பட்டதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் உடலை மீட்டு, உடல் கூறாய்வுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com