கள்ளக்குறிச்சி
அரசுப் பேருந்தில் தமிழ்நாடு ஒட்டு வில்லைகளை ஒட்டிய நாம் தமிழா் கட்சியினா் 8 போ் கைது
திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 8 அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஒட்டு வில்லைகளை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 8 அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஒட்டு வில்லைகளை (ஸ்டிக்கா்) ஒட்டியதாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.
நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த மாநில தொழிற்சங்கப்பேரவை செயலா் ரமேஷ் (40), அரகண்டநல்லூா் கி.காா்த்திகேயன் (32), அத்தியூா் க.ஹரிகரசா்மா (30), மங்கலம் ரா.குப்புசாமி (40), பாக்கம்புதூா் க.குப்பன் (48), செட்டிதாங்கல் வெ.குமரேசன் (35), க.கண்ணன் (34), தணகனந்தல் ஆ.முனியன்(37) ஆகியோா் திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஒட்டுவில்லையை ஒட்டியதாக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி 8 பேரைக் கைதுசெய்தனா்.
