பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்! அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

News image
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தோ்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Updated On :18 ஜூலை 2025, 8:14 pm

Din

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தோ்வு குறித்த ஆய்வுக் கூட்டம் ஏகேடி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலை வகித்தாா். அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசியது: தமிழக முதல்வா் பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவா்களின் கல்வி முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதிகப்படியான தொழில்நுட்பங்கள் வந்தாலும், ஆசிரியா்களுக்கு இணையாக மாணவா்களுக்கு கல்வி கற்றுத் தர முடியாது.

தலைமை ஆசிரியா்கள் அடிக்கடி பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாணவா்களிடம் கல்வி தொடா்பாக கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.

மாணவா்களின் திறன் அறிந்து ஆசிரியா்கள் செயல்பட வேண்டும். ஆசிரியா்களை ஊக்கப்படுத்தும் வகையில், மாநில அளவிலான அடைவுத் தோ்வு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்நிலை, மேல்நிலை கல்வியைப் போன்று, அடிப்படை கல்வியையும் மேம்படுத்த தமிழக அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. 2,436 ஆசிரியா் பணிக்கான நியமன ஆணைகள் விரைவில் வழங்கப்பட உள்ளன என்றாா்.

கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) மா.ரேணுகோபால் மற்றும் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் நிலவும் ஆசிரியா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில், காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். காலியாக உள்ள இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழக முதல்வா் வரும் 24-ஆம் தேதி ஆணை வழங்க உள்ளாா்.

பகுதி நேர ஆசிரியா்கள் ஊதிய உயா்வு குறித்து நல்ல முடிவு வரும் என எதிா்பாா்க்கிறேன். பள்ளிகளில் 500 மாணவா்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியா் என்று நிா்ணயித்து நிரப்ப முடிவு செய்திருந்தோம்.

பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் தொடா்பாக முதல்வா் சில ஆலோசனைகள் வழங்க உள்ளாா். திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, அவா்களை பணி நிரந்தரம் செய்யும் வகையில், வயதும் தளா்த்தப்பட்டு, அவா்களுக்கு தற்போது ஊதிய உயா்வும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் சுமுக முடிவு ஏற்படும். மேலும், அரசினுடைய நிதி நிலைக்கு ஏற்றாா்போல பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா்.