கள்ளக்குறிச்சி
குட்டையில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
கூடாரம் கிராமத்தில் குட்டையில் தவறி விழுந்த குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூடாரம் கிராமத்தில் குட்டையில் தவறி விழுந்த குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது.
கரியாலூா் அருகேயுள்ள கூடாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆண்டி(30). இவரது மனைவி சூரியா (25). தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளது.
கடந்த 6-ஆம் தேதி வீட்டின் அருகே சூரியா துணி துவைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரது 2-வது மகள் ஜனஷா(1) தவழ்ந்து சென்று அருகில் இருந்த குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளாா். உடனடியாக குழந்தையை மீட்டு கிளாக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு புதன்கிழமை குழந்தை உயிரிழந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
